Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

12% உயர்வுடன் பட்டியலான Bombay Coated பங்குகள்

12% உயர்வுடன் பட்டியலான Bombay Coated பங்குகள்

ரூ.183.06 கோடி மதிப்பிலான ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது.

பகிரவும் WhatsApp Facebook

பாம்பே கோட்டட் அண்ட் ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் சுமார் 12 சதவீத உயர்வுடன் பட்டியலாகின.

இந்நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டு விலை ரூ.82 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தேசிய பங்குச்சந்தையில் பங்கு ரூ.92.02-க்கு பட்டியலானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.578.11 கோடியாக உள்ளது.

ரூ.183.06 கோடி மதிப்பிலான ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. மொத்தமாக 60.77 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன. குறிப்பாக, நிறுவனம்சாரா முதலீட்டாளர்கள் பிரிவில் 158.32 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட நிதியில் ரூ.125 கோடியை கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், ரூ.15.77 கோடியை இயந்திரங்கள் வாங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பங்குகளைப் பெற்ற முதலீட்டாளர்கள் ஓரளவு லாபத்தைப் பதிவு செய்துவிட்டு, மீதமுள்ள பங்குகளை நீண்ட காலத்துக்கு வைத்திருக்கலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
LIC இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 20% உயர்வு
அடுத்த செய்தி
5 துறைகளில் 35 பங்குகள் ஜேபி மோர்கன் பரிந்துரை

தொடர்புடைய செய்திகள்